சம்பளம் கோடிகளை தொடுவது எப்போது? மனவருத்தத்தில் பிரியா பவானி சங்கர்


சம்பளம் கோடிகளை தொடுவது எப்போது? மனவருத்தத்தில் பிரியா பவானி சங்கர்
x

சினிமாவுக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் லட்சங்களில் தான் சம்பளம் வாங்க முடிகிறது என்று தினந்தோறும் நொந்து கொள்கிறாராம் பிரியா பவானி சங்கர்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து ரசிகர்களின் மனதில் முக்கிய இடத்தைப் பிடித்த கதாநாயகியாக திகழ்கிறார் பிரியா பவானி சங்கர். தற்போது 'இந்தியன்-2', 'பத்து தல' உள்பட பல படங்களில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

கைவசம் பல படங்கள் இருந்தும் பிரியா பவானி சங்கர் மனவருத்தத்தில் இருந்து வருகிறாராம். முன்னணி நடிகைகள் பலரும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும்போது, சினிமாவுக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் லட்சங்களில் தான் சம்பளம் வாங்க முடிகிறது என்று தினந்தோறும் நொந்து கொள்கிறாராம். கார்த்தி, தனுஷ், அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய சம்பளத்தை ஏற்ற எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை. அதுமட்டுமன்றி பெரும்பாலும் துணை நடிகை கதாபாத்திரங்களே இவரை தேடி வருகிறது. இதனால் தனது வருத்தத்தை நண்பர்களிடம் புலம்பி தள்ளுகிறார். இனிமேல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறாராம். அப்பொழுதுதான் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்த முடியும் என்று அவர் முடிவு செய்து இருக்கிறார்.

1 More update

Next Story