உருவ கேலியும் ஒரு வகை வன்முறைதான் - 'காம்ப்ளக்ஸ்' பட டைரக்டர்
உருவ கேலியும் ஒரு வகை வன்முறைதான் என்று ‘காம்ப்ளக்ஸ்’ பட டைரக்டர் மந்த்ரா வீரபாண்டியன் கூறினார்.
"உருவத்தை பார்த்து கேலி செய்வது தவறு. அதுவும் ஒருவன் முறைதான் என்ற கருவை அடிப்படையாக வைத்து, 'காம்ப்ளக்ஸ்' படத்தை உருவாக்கி இருக்கிறோம்" என்று சொல்கிறார் டைரக்டர் மந்த்ரா வீரபாண்டியன். இவர், டைரக்டர் பாலாவிடம் உதவி டைரக்டராக இருந்தவர்.
'காம்ப்ளக்ஸ்' படத்தைப் பற்றி அவர் மேலும் கூறும்போது...
"இந்தப் படத்தில் கதைநாயகனாக வெங்கட் செங்குட்டுவன் நடிக்கிறார். நாயகியாக இவானா நடிக்கிறார். இவர்களுடன் ஆரத்யா, 'ஆடுகளம்' நரேன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். சென்னை, நெல்லையில் படம் வளர்ந்து இருக்கிறது" என்றார்.
Related Tags :
Next Story