மாயோன் திரைப்படத்தின் முன்னோட்டம்
அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 'மாயோன்'. இந்த படத்தில் கதாநாயகனாக சிபி சத்யராஜ் நடித்திருக்கிறார்.
டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 'மாயோன்'. இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய இப்படத்தை என்.கிஷோர் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் படம் குறித்த புதிய தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த தருணத்தில் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தணிக்கைக்காக சென்றது. படத்தை பார்வையிட்ட தணிக்கை குழுவினர் எந்த இடத்திலும் ஒரு காட்சியைக்கூட நீக்காமல் பாராட்டி 'யு' சான்றிதழை வழங்கினர்.
பிரம்மாண்டமான பொருட்செலவில் பழங்கால கோவில் ஒன்றை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'மாயோன்' திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.