படம் வெற்றி பெறுவதற்கு கதை முக்கியமா, ஹீரோயிசம் முக்கியமா?


படம் வெற்றி பெறுவதற்கு கதை முக்கியமா, ஹீரோயிசம் முக்கியமா?
x

கதை திருட்டை மையமாக வைத்து படத்தை உருவாக்கி வருவதாக டைரக்டர் சந்தோஷ் நம்பிராஜன் கூறுகிறார்.

''நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் காலம் காலமாக இருந்து வரும் பிரச்சினை, கதை திருட்டு. கதை திருட்டை மையமாக வைத்து இதுவரை எந்த தமிழ் படமும் வரவில்லை. முதல் முறையாக கதை திருட்டை பேசும் படமாக, 'ஸ்டார்ட் கேமாரா ஆக்சன்' என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறோம்'' என்கிறார், அந்தப் படத்தின் டைரக்டர் சந்தோஷ் நம்பிராஜன்.

இவர் மேலும் கூறுகிறார்:-

''கதைக்காக நடிகர்களா, வியாபாரத்துக்காக நடிகர்களா? படம் வெற்றி பெறுவதற்கு கதை முக்கியமா, ஹீரோயிசம் முக்கியமா? என்பதை பேசுபொருளாக்கி இருக்கிறோம். படத்தின் இறுதியில் சுமூகமான ஒரு தீர்வையும் சொல்லியிருக்கிறோம்.

தேசிய விருது பெற்ற 'டுலெட்' படத்தின் கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன், 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தின் கதாநாயகன் ஆண்டனி, 'நேரம்', 'வெற்றிவேல்' படங்களின் இரண்டாவது கதாநாயகன் ஆனந்த்நாக், சுப்பிரமணியம் சிவா, தென்றல் ரகுநாதன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சிறப்பு தோற்றங்களில் பட அதிபர் கலைஞானம், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் ஆகிய இருவரும் வருகிறார்கள்.''

1 More update

Next Story