இப்படி செய்தால் என்னை சங்கி என்று கூறுவார்கள் - இயக்குனர் மோகன் ஜி


இப்படி செய்தால் என்னை சங்கி என்று கூறுவார்கள் - இயக்குனர் மோகன் ஜி
x

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பகாசூரன்'. இப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து, 'பகாசூரன்' படத்தின் இயக்குனர் மோகன் ஜி மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

'பகாசூரன் படம் குறித்தும் அவரது சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "இந்த மாதிரியான ஒரு தோற்றத்தை உங்களுக்கு கொடுத்தேன் என்றால் என்னை சங்கி என்று கூறுவார்கள். உங்களையும் அவ்வாறு சொல்ல வாய்ப்பிருக்கிறது. இது எதாவது கொடுக்கும் என்றால் நாம் கதாபாத்திரத்தை மாற்றிக் கொள்ளலாம் சார். அப்படியே ரொம்ப சாதாரணமாக சட்டை மற்றும் வெள்ளை வேட்டிக் கட்டுக்கொண்டு செய்யலாம் என்று கூறினேன்.

ஆனால் செல்வ ராகவன் கதைக்கு என்ன எழுதியிருக்கிறீர்கள். எப்படி நினைக்கிறீர்கள் அதை செய்யுங்கள். எதை பற்றியும் நீங்கள் யோசிக்காதீர்கள். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். அனைத்தையும் கடந்து வந்து விடலாம் என்று கூறினார். அவர் சொன்னது தான் நடந்தது. நான் நினைத்த அளவிற்கு கூட யாரும் தப்பாக பேசவில்லை" என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.


Next Story