எப்பொழுதும் படிக்கலாம்- இளங்கலை வணிகவியல்


எப்பொழுதும் படிக்கலாம்- இளங்கலை வணிகவியல்
x
தினத்தந்தி 12 May 2023 8:45 PM IST (Updated: 12 May 2023 8:46 PM IST)
t-max-icont-min-icon

இளங்கலை வணிகவியல் அல்லது பி.காம் என்பது மிகவும் பிரபலமான இளங்கலைப் படிப்பாகும். பொருட்கள் மற்றும் பரிமாற்ற சேவைகளுடன் தொடர்புடைய வணிகத்தின் ஒரு கிளையாக இதனை வணிக அகராதி வரையறுக்கிறது.

இது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பரிமாற்றத்தை எளிதாக்கும் அனைத்து செயல்பாடுகளையும்,பரி மாற்றத்துடன் தொடர்புடைய அனைத்து செயல்முறைகளையும் உள்ளடக்கியுள்ளது.

அடிப்படை தகுதி

* பன்னிரண்டாம் வகுப்பில் வணிகவியல் பாடப்பிரிவில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இத்துறை படிப்பில் இணைவதற்கு நுழைவுத் தேர்வுகளை நடத்தி அந்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. .

* சில கல்லூரிகளில் கட்-ஆஃப் சதவீதத்தின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது.

பி.காம் படிப்பானது கல்லூரிகளில் முழுநேரப் படிப்பாகவும், இணையதளம் மூலம் படிக்கும் படிப்பாகவும், தொலைதூரக் கல்வி மூலம் படிக்கும் படிப்பாகவும், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் படிப்பாகவும் உள்ளது.

பி.காம் சிறப்பு பிரிவுகள்

பி.காம் வங்கி மற்றும் காப்பீடு (பேங்கிங் அண்ட் இன்சுரன்ஸ்)

பி.காம் வங்கி மேலாண்மை (பேங்கிங் மேனேஜ்மென்ட்)

பி.காம் தொழில்முறை கணக்கியல் (ப்ரொபஷனல் அக்கவுண்டிங்)

பி.காம் வரி மற்றும் நிதி (டாக்ஸேஷன் அண்ட் ஃபைனான்ஸ்)

பி.காம் கணக்கியல் (அக்கவுண்டன்சி)

பி.காம் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை (டூரிசம் டிராவல் மேனேஜ்மென்ட்)

பி.காம் சட்டம்

பி.காம் ஹானர்ஸ்

பி.காம் கணினி பயன்பாடுகள் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்)

பி.காம் கணக்கியல் மற்றும் நிதி (அக்கவுண்டிங் அண்ட் ஃபைனான்ஸ்)

பி.காம் நிதி (ஃபைனான்ஸ்)

பி.காம் நிபுணத்துவம்(ப்ரொஃபஷனல்)

பி.காம் கூட்டுறவு ( கோஆப்பரேஷன்)

பி.காம் நிறுவனச் செயலாளர் (கார்ப்பரேட் செக்ரட்டரி ஷிப்)

பி.காம் பொருளாதாரம்(எகனாமிக்ஸ்)

பி.காம் வரிவிதிப்பு (டாக்ஸேஷன்)

பி.காம் கணினிஅறிவியல்(கம்ப்யூட்டர் சயின்ஸ்)

பி.காம் தகவல் தொழில்நுட்பம் (இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி)

பி.காம் மேலாண்மை படிப்பு(மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ்)

கல்லூரிகள்

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.காம் படிப்புகள் மிகவும் சிறப்பாக வழங்கப்படுகின்றன. குறிப்பாக தில்லி, சண்டிகர், சென்னை, பெங்களூர், சத்தீஸ்கர், மும்பை, கொல்கத்தா, புனே போன்ற நகரங்களில் உள்ள மிகவும் பிரபலமான கல்லூரிகளில் பி.காம் படிப்புகள் சிறப்பாக வழங்கப்படுகின்றன..அமெரிக்கா மற்றும் லண்டனில் இருக்கும் மிகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் பி.காம் படிப்புகளை மிகச் சிறந்த முறையில் வழங்கி வருகின்றன.

வெளிநாட்டில் படிப்பதற்கான தகுதிகள்

* 15 வருட படிப்பு தகுதியை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.

* மாணவர்களின் தனிப்பட்ட அறிக்கை.

* பன்னிரண்டாம் வகுப்பில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* குறைந்தபட்சம் இரண்டு அறிமுகங்களை வைத்திருக்க வேண்டும்..

* ஒன்று முதல் இரண்டு வருடங்கள் பணி அனுபவம் இருப்பது கட்டாயமாகும்..

* ஆங்கில மொழிப்புலமைக்கான சான்று அவசியமாகும்.

* அதிக தரம் உள்ளதாக போர்ட்ஃபோலியோ இருக்க வேண்டும்.

* நேர்காணல் செயல்திறன் நன்றாக இருக்க வேண்டும்..

வெளிநாட்டில் படிப்பதற்கான மொழித் தேர்வுகள்

ஐஇஎல்டிஎஸ் தேர்வில் குறைந்தபட்சம் 5.5 பெற்றிருக்க வேண்டும்.

டிஒஇஎஃப்எல் தேர்வில் குறைந்தபட்சம் 90 பெற்றிருக்க வேண்டும்.

பிடிஇ தேர்வில் குறைந்தபட்சம் 61 பெற்றிருக்கவேண்டும்.

ஒருங்கிணைக்கப்பட்ட பி.காம்

ஒருங்கிணைந்த படிப்புகள் இரண்டு இளங்கலை-நிலைப் படிப்புகளாக இருக்கலாம் அல்லது முதுகலை படிப்புகளுடன் இணைந்த இளங்கலைப் படிப்புகளாக இருக்கலாம். இந்த படிப்புகள் இரண்டு படிப்புகளின் கூட்டு பட்டத்தை வழங்குகின்றன.

ஒருங்கிணைந்த பி.காம் என்பது ஐந்தாண்டு யுஜி படிப்பாகும்..இது பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு தொடரக்கூடிய இளங்கலை படிப்பாகும்.

இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் இந்த ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டுகால படிப்பினை வழங்குகின்றன.அவை:

* பி.காம் + எம்.காம்

* பி.காம் + எம்பிஏ

* பி.காம் + எல்.எல்.பி

* பி.காம் + சி.ஏ

* பி.காம் + ஏசிசிஏ

பி.காம் பொதுப் பாடங்கள்

அக்கவுண்ட்ஸ், எக்கனாமிக்ஸ், மேத்ஸ், கம்பெனி லா, மார்க்கெட்டிங், ஐடி, டேக்ஸ், பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சிஸ்டம்ஸ்.

உயர் படிப்புகள்

எம்.காம்

எம்.பி.ஏ

சி.ஏ

சி.எம்.ஏ

வேலை வாய்ப்புகள்

இப்பொழுது பெரும்பாலான நிறுவனங்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வளாக நேர்காணல் நடத்தி அதன்மூலம் தங்கள் நிறுவனங்களுக்கு தகுதியான பட்டதாரிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்..

பி.காம் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு பொது மற்றும் தனியார் துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

வகிக்கும் பதவிகள்

தணிக்கையாளர்கள்

பட்ஜெட் ஆய்வாளர்கள்

தலைமை நிதி அதிகாரி

செலவு மதிப்பீட்டாளர்கள்

வணிக நடவடிக்கை மேலாளர்

வரி ஆலோசகர்

பங்கு தரகர்

கணக்காளர்

நிதி ஆலோசகர்


Next Story