வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி முதல் செப்டெம்பர் 30ம் தேதி வரை தென்மேற்குபருவமழை காலம் எனவும், அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31 ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் எனவும் கணக்கிடப்படுகிறது. அதன் படி இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு , கேரளா , ஆந்திரா , கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இயல்பை விட கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை 112 சதவீதம் கூடுதலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story