தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதமடித்த வெப்பநிலை


தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதமடித்த வெப்பநிலை
x
தினத்தந்தி 17 Sep 2024 6:00 PM GMT (Updated: 18 Sep 2024 6:27 AM GMT)

தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. எனினும், ஒருசில பகுதிகளில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவுக்கு சில இடங்களில் அனல் காற்று வீசியது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று இந்திய அளவில் மதுரையில் அதிகபட்ச வெப்பநிலை (105.8 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகியுள்ளது.

100 டிகிரியை கடந்து வெயில் பதிவான இடங்கள் விவரம் வருமாறு:-

மதுரை 105.8 டிகிரி (41 செல்சியஸ்), ஈரோடு 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்), நாகப்பட்டினம் 102.74 டிகிரி (39.3 செல்சியஸ்), சென்னை மீனம்பாக்கம் 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்), பாளையங்கோட்டை 102.2 டிகிரி (39 செல்சியஸ்), தஞ்சாவூர் 102.2 டிகிரி (39 செல்சியஸ்), அதிராமப்பட்டினம் 102.02 டிகிரி (38.9 செல்சியஸ்), திருச்சி 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்), கரூர் 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்), கடலூர் 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்), சென்னை நுங்கம்பாக்கம் 100.4 டிகிரி (38 செல்சியஸ்), வேலூர் 100.4 டிகிரி (38 செல்சியஸ்).

இதுதவிர புதுச்சேரியில் 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்), காரைக்கால் 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்) வெயில் பதிவாகியிருந்தது.


Next Story