வாஸ்து நாட்கள் -2024


வாஸ்து நாட்கள்  -2024
x

வருடந்தோறும் தமிழ் மாதப்படி வாஸ்து பகவான் கண் விழிக்கும் தேதியும், நேரமும் மாறாமல் நிலையானதாக இருக்கும்.

வாஸ்து பகவான் கண் விழித்திருக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் வாஸ்து நாட்கள் வருகின்றன. ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும்.

இந்த எட்டு நாட்களில் தினமும் வாஸ்து பகவான் ஒன்றரை மணிநேரம் மட்டுமே கண் விழித்திருப்பார். அப்படி அவர் விழித்ததும் காலையிலேயே நீராடி, பூஜைகள் செய்தபின் உணவு எடுத்துக் கொள்ளுவார். அப்படி நிம்மதியும் நிறைவுமாக இருக்கும் தருணம்தான், வாஸ்து பூஜை, பூமி பூஜைக்கான நேரமாகும். பூமி பூஜையின்போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜை செய்தால் கட்டுமானப் பணி தடையின்றி நிறைவேறும் என்பது ஐதீகம்.

வாஸ்து பகவான் விழிக்கும் நாட்கள்

சித்திரை 10-ம் தேதி: காலை 8.00 - 9:30

வைகாசி 21-ம் தேதி: காலை 9:12 -10:42

ஆடி 11-ம் தேதி: காலை 6:48 - 8:18

ஆவணி 6-ம் தேதி: மாலை 2:24 - 3:54

ஐப்பசி 11-ம் தேதி: காலை 6:48 - 8:18

கார்த்திகை 8-ம் தேதி: காலை 10:00 -11:30

தை 12-ம் தேதி: காலை 9:12 - 10:42

மாசி 22-ம் தேதி: காலை 9:12 - 10:42

வருடந்தோறும் (தமிழ் மாதப்படி) வாஸ்து பகவான் கண் விழிக்கும் தேதியும், நேரமும் மாறாமல் நிலையானதாக இருக்கும். மாற்றமில்லாத இந்த நாட்களுக்கு வாரம், திதி, நட்சத்திர தோஷம் எதுவும் கிடையாது என்பது ஐதீகம்.

2024 வாஸ்து நாட்கள்:

ஜனவரி 26
மார்ச் 5
ஏப்ரல் 23
ஜூன் 4
ஜூலை 27
ஆகஸ்ட் 22
அக்டோபர் 27
நவம்பர் 23

Next Story