ஜன்தன் திட்டத்தில் 48 கோடி வங்கி கணக்குகள் தொடக்கம் - நிர்மலா சீதாராமன் தகவல்


ஜன்தன் திட்டத்தில் 48 கோடி வங்கி கணக்குகள் தொடக்கம் - நிர்மலா சீதாராமன் தகவல்
x

ஜன்தன் திட்டத்தில் நாடு முழுவதும் 47.8 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு இருப்பதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

புதுடெல்லி,


நாட்டில் உள்ள அனைத்து பிரிவினரும் வங்கி கணக்குகளை கையாளும் நோக்கில் கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு ஜன்தன் திட்டத்தை தொடங்கியது. நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஜன்தன் திட்டம் குறித்தும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ஜன்தன் திட்டத்தின் கீழ் இதுவரை 47.8 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் கிராமப்புற பெண்களை 1 லட்சம் சுய உதவிக்குழுக்களாக திரட்டி குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது' என தெரிவித்தார்.

பசுமை வளர்ச்சி முயற்சிகள் கார்பன் தீவிரத்தை குறைக்கவும், பசுமையான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.


Next Story