இன்றைய ராசிபலன் - 26.06.2024


இன்றைய ராசிபலன் - 26.06.2024
x
தினத்தந்தி 26 Jun 2024 12:48 AM GMT (Updated: 26 Jun 2024 4:46 AM GMT)

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் ஆனி மாதம் 12-ம் தேதி புதன்கிழமை

ஆங்கில தேதி: 26

ஆங்கில மாதம்: ஜூன்

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 3-30 வரை அவிட்டம் பின்பு சதயம்

திதி: இன்று அதிகாலை 1-25 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம்: சித்தயோகம்

நல்ல நேரம் காலை: 9.30 - 10.30

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் மாலை: 12.00 - 1.30

எமகண்டம் காலை: 7.30 - 9.00

குளிகை காலை: 10.30 - 12.00

கவுரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

கவுரி நல்ல நேரம் மாலை 6.30 - 7.30

சூலம் : வடக்கு

சந்திராஷ்டம் திருவாதிரை, புனர்பூசம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபத்தை காண்பர். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். குடும்பத்துடன் வெளிநாடு சுற்றிப் பார்க்க திட்டமிடுவர். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும் காதல் கசக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வர். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். உடல்நிலை நன்றாக இருக்கும். மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்

இன்று திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழ்ப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கடகம்

தாயார் தங்களுக்கு உதவிகரமாக இருப்பார். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியம் கைகூடும். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

சிம்மம்

வங்கியில் நீங்கள் விரும்பிய வீடு கட்ட எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. தம்பதியரிடையே அன்பு மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். கடன் அன்பை முறிக்கும். ஆதலால், கொடுக்கல் வாங்கலில் கவனம். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரம் லாபகரமாக செல்லும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

துலாம்

வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். உடல் நலம் பளிச்சிடும். வாகனத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். பெரிய விசயங்கள் சட்டென்று முடியும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த ஒரு நற்செய்தி வரும். நினைத்த காரியம் வெற்றி பெறும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

தம்பதிகளிடையே மனஸ்தாபம் ஏற்படும். விட்டுக் கொடுத்து செல்லவும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். கை, கால் வலி வந்துப் போகும்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

மகரம்

உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். குறித்த நேரத்தில் உணவு உட்கொள்ளுங்கள். பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். விருந்து விழா என்று கலந்து கொள்வீர்கள். உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரிப்பது நல்லது. ஆவணங்களை பாதுகாப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கும்பம்

வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். திடீர் பயணங்கள் வந்துப் போகும். ஒரு சிலர் நவீன வாகனம் வாங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

மீனம்

உத்தியோகஸ்தர்களுக்கு பதிவு உயர்வு உண்டு. மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தம்பதிகளிடையே நல்லிணக்கம் உண்டாகும். தேவையற்ற பயம் விலகும். புதிய ப்ராஜெக்ட் கிடைக்கும். தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு


Next Story