இந்தியாவில் ஒருவருக்கு எம்-பாக்ஸ் உறுதி


இந்தியாவில் ஒருவருக்கு எம்-பாக்ஸ் உறுதி
x
தினத்தந்தி 9 Sept 2024 12:49 PM (Updated: 9 Sept 2024 1:17 PM)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய நபருக்கு எம்.பாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய் ஆகும். இந்த நோய் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது. 2022 ம் ஆண்டு முதன் முதலாக ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 517 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், நேற்று குரங்கு அம்மை தொற்று அறிகுறியுள்ள நபருக்கு இன்று நடந்த பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அவருக்கு கிளேட் 2 வகை தொற்று பாதிப்பு எனவும், இது உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள தொற்று பாதிப்பு இல்லை எனவும் தொற்று உறுதியாகியுள்ள நபர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.பாக்ஸ் பாதிப்பு இருந்த நாட்டிற்கு சென்று திரும்பிய நபருக்கு அறிகுறி தென்பட்ட நிலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

1 More update

Next Story