போட் அல்டிமா கனெக்ட் ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்


போட் அல்டிமா கனெக்ட் ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்
x

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போட் நிறுவனம் புதிதாக அல்டிமா கனெக்ட் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. 1.83 அங்குல திரையைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் கடிகாரத்தில் புளூடூத் இணைப்பு வசதியும், உள்ளீடாக மைக்ரோபோன் வசதியும் உள்ளது. 10 முக்கியமானவர்களின் செல்போன் எண்களை நினைவகத்தில் வைக்கும் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட் கடிகாரம் இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவற்றை துல்லியமாகக் காட்டும். கருப்பு, கிரே, செர்ரி, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.1,799.

1 More update

Next Story