
3வது முறையாக பிரதமராகிறார் மோடி - 8ம் தேதி பதவியேற்பு விழா
மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா 8ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Jun 2024 7:46 AM
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடக்கம்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
5 Jun 2024 7:19 AM
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில்தான் உள்ளோம் - சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 5:56 AM
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
5 Jun 2024 5:17 AM
பிரதமர் மோடி தலைமையில் இன்று மந்திரிசபை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய மந்திரிசபை கூட உள்ளது.
5 Jun 2024 2:49 AM
வரும் காலங்களில் உங்களின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம் - அண்ணாமலை
எங்கள் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்துள்ள அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
4 Jun 2024 3:04 PM
வரலாற்று வெற்றி - பிரதமர் மோடி நன்றி
மக்கள் தொடர்ந்து 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4 Jun 2024 2:42 PM
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களின் எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த அனைவருக்கும் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 Jun 2024 1:40 PM
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது - ராகுல் காந்தி பேட்டி
மக்கள் தீர்ப்பு அரசியல் சாசனத்தைக் காக்க உதவியிருக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
4 Jun 2024 1:12 PM
சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்தாரா சரத்பவார்..? வெளியான முக்கிய தகவல்
நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு, இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் சரத்பவார் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
4 Jun 2024 11:10 AM
மதுரையில் வெற்றி: சு.வெங்கடேசனுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்திய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியுள்ளார்.
4 Jun 2024 10:51 AM
கடும் போட்டிக்கு இடையே திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சசிதரூர் வெற்றிமுகம்
கடும் நெருக்கடி கொடுத்த பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகரை விட சசிதரூர் 15,879 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
4 Jun 2024 10:19 AM