மாம்பழத்துடன் சாப்பிடக்கூடாதவை


மாம்பழத்துடன் சாப்பிடக்கூடாதவை
x

மாம்பழ சீசன் முடிவுக்கு வர உள்ளது. மாம்பழங்களோடு சில உணவுப்பொருட்களை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரு உணவுப்பொருட்களும் எதிரெதிர் குணங்களை கொண்டிருக்கலாம்.

ஒன்று சூடாகவும் மற்றொன்று குளிராகவும் இருக்கலாம். இரண்டு பொருட்களும் ஒரே மாதிரியான குணங்களையும் கொண்டிருக்கலாம். இத்தகைய உணவுகளை ஒன்றாக உட்கொள்ளும் போது உடலில் எதிர்வினை புரியக்கூடும். அதனால் மாம்பழத்துடன் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.

1. தயிர் - மாம்பழம்:

சிலர் மாம்பழத்துடனோ, மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்போ தயிர் சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடுவது செரிமானத்திற்கு உகந்ததல்ல. மாம்பழம் சூடான உணவுப்பொருள். அது உடலில் வெப்பத்தை உண்டாக்க முனையும். தயிர் குளிர்ச்சி விளைவைக் கொண்டிருப்பதால், செரிமான செயல்பாட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

2. ஐஸ்கிரீம் -மாம்பழம்:

மாம்பழத்துடன் தவிர்க்க வேண்டிய மற்றொரு உணவுப்பொருள் ஐஸ்கிரீம். மாம்பழமும் ஐஸ்கிரீமும் கலந்த மில்க் ஷேக்கை ருசிப்பதற்கு பலரும் விரும்புவார்கள். அதுவும் உடலுக்கு ஆரோக்கியமானதல்ல. இரண்டும் எதிரெதிர் குணங்களை கொண்டிருப்பதால் அவற்றின் வெப்பநிலையில் ஏற்படும் வேறுபாடு செரிமான செயல்முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, மாம்பழத்துடன் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

3. சிட்ரஸ் பழங்கள் - மாம்பழம்:

மாம்பழங்களுடன் சிட்ரஸ் பழங்களை ஒன்றாக உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அதில் ஆரஞ்சு, பெர்ரி, கிவி போன்ற பழங்களை மாம்பழத்துடன் சேர்த்து சாப்பிடுவது உடலின் பி.எச். சமநிலையை சீர்குலைக்கும். செரிமான செயல்பாட்டிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

4. கார்பனேற்றப்பட்ட பானங்கள்-மாம்பழம்:

மாம்பழத்துடன் கார்பனேற்றப்பட்ட பானங்களை அருந்துவதையும் தவிர்ப்பது நல்லது. இரண்டிலும் சர்க்கரை சேர்ந்திருக்கும். அவற்றை ஒன்றாக உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்கும்.

5. காரமான உணவு - மாம்பழம்:

மாம்பழத்துடன் காரமான உணவு வகைகளை சாப்பிடுவதும் கூடாது. இரண்டும் சேர்ந்து உடலின் வெப்பத்தை அதிகரித்து, செரிமான செயல்முறைக்கு இடையூறு ஏற்படுத்தும். அடிக்கடி அசிடிட்டி பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் அறவே தவிர்க்க வேண்டும்.

*மாம் பழமும் பாகற்காயும் எதிரெதிர் சுவை கொண்டவை என்பதால் இரண்டையும் ஒரே சமயத்தில் சாப்பிடக் கூடாது.

* மாம்பழம் சாப்பிட்டுவிட்டு உடனே தண்ணீர் பருகுவதும் கூடாது. 15 நிமிடங்கள் கழித்து தண்ணீர் பருகுவதுதான் நல்லது.

* சாலட் தயாரிக்கும்போது மாம்பழம், தர்பூசணி இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது.

*மாம்பழத்துடன் மது அருந்துவதை தவிர்க்கவும் பரிந்துரைக்கப் படுகிறது. ஏனெனில் இது நீரிழப்புக்கு வழிவகுக் கும்.


Next Story