விசித்திர மீன்
மனித உடல் உறுப்புகளில் இதயம், நுரையீரல், மூளை இவை மூன்றும் முக்கியமானவை. ஆனால் ஜெல்லி மீன்களுக்கு இதயமும், நுரையீரலும், மூளையும் இல்லை. முக்கியமான உறுப்புகள் இல்லாமல்அவை. எப்படி வாழ்கின்றன தெரியுமா?
ஜெல்லி மீன்கள் மிகவும் மெல்லிய தோல் கொண்டவை. அவை ஆக்ஸிஜனை உறிஞ்சுவதற்கு உதவுவதால் சுவாசத்திற்கு நுரையீரல் தேவையில்லை. அதன் உடலில் ரத்தம் இல்லை. எனவே, ரத்தத்தை பம்ப் செய்ய இதயம் தேவையில்லை.
மேல் தோலுக்கு கீழே ஒரு நரம்பு அமைப்பு உள்ளது. இந்த நரம்பு சமிக்ஞைகளை அனுப்ப உதவுகிறது. அப்படி சமிக்ஞைகளை பெறும்போது, அதன் வசிப்பிட சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக்கொள்கின்றன. எனவே, அவற்றுக்கு மூளையும் தேவையில்லை.
Related Tags :
Next Story