டிராகன் பழம் சாப்பிட்டால்...
கவர்ச்சிகரமான பழ இனங்களுள் ஒன்றாக காட்சி அளிக்கும் டிராகன் பழத்தின் பூர்வீகமாக மெக்சிகோ அறியப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா முழுவதும் பரவி இப்போது உலகம் முழுவதும் விளைவிக்கப்படுகிறது. இந்தியாவிலும் இதனை பலர் விரும்பி ருசிக்க பழகிவிட்டார்கள். டிராகன் பழத்தை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்வோம்.
* டிராகன் பழத்தில் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை உடலில் செல்களை சேதப்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் வழிவகுக்கின்றன.
* டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தக்கூடியது. நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடி உடல் பலவீனம் அடைவதை தடுக்கக்கூடியது.
* டிராகன் பழத்தில் உள்ளடங்கி இருக்கும் நார்ச்சத்து செரிமான செயல்பாடுகளையும், குடல் இயக்கங்களையும் மேம்படுத்த உதவும்.
* இதில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து சருமத்தை பாதுகாக்க வழிவகை செய்யும். விரைவிலேயே வயதான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தடுக்கும்.
*டிராகன் பழத்தில் உள்ள நார்ச்சத்துகள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆரோக்கியமான கொழுப்பின் செயல்பாடுகளை ஊக்குவிக்க உதவும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதய நோய் அபாயங்களையும் குறைக்கும்.
* டிராகன் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் வெப்பமான காலநிலையின்போது உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க துணைபுரியும். உடற்பயிற்சி செய்த பிறகு உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கும் டிராகன் பழம் சிறந்த தேர்வாக அமையும்.
* டிராகன் பழத்தில் கலோரிகள் குறைவு. ஆனால் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.