பின்னடையும் பொருளாதாரம்
பொருளாதார மந்தநிலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாக பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் கூட பொருளாதார வளர்ச்சி 0.5 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும் கூறி உள்ளது.
கொரோனா என்ற கொடூர வைரஸ் மனித உயிர்களை மட்டும் பலி கொள்ளவில்லை. பல உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் கபளீகரம் செய்துவிட்டது. பொருளாதார வளர்ச்சி தடைபட்டதோடு அந்நிய செலவாணி இருப்பை தக்கவைக்க முடியாமல் பல நாடுகள் தடுமாறின.
பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டன. இப்போது அதில் இருந்து ஓரளவு மீண்டு வந்தாலும் பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் நிலவிக்கொண்டுதான் இருக்கிறது.
சர்வதேச நாணய நிதியம் 2023-ம் ஆண்டுக்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் மந்தநிலையை கணித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை 2022-ம் ஆண்டு 3.4 சதவீதமாக இருந்த நிலையில் இருந்து 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. பொருளாதார மந்தநிலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாக பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் கூட பொருளாதார வளர்ச்சி 0.5 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும் கூறி உள்ளது.
பணவீக்கம், வேலையின்மை, கடன் விகிதங்கள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த பட்டியலை தொகுத்துள்ளது. 157 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 103-வது இடத்தில் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் வேலைவாய்ப்பின்மை. இந்தியாவில் வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 7.8 சதவீதமாக இருந்தது. அது ஏப்ரல் மாதத்தில் 8.11 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மறுபுறம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, அந்நிய செலவாணி கையிருப்பு கரைவது, அரசியல் ஸ்திரமின்மை உள்பட பல்வேறு காரணங்களால் அந்த நாடு தத்தளித்துக்கொண்டிருக்கிறது. பணவீக்கம்தான் பாகிஸ்தானின் அவல நிலைக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்துடன் போராடி வரும் ஏழை நாடுகளின் நிலைமையோ அதைவிட மோசமாக உள்ளது. பணவீக்கம், வேலையின்மை, கடன் விகிதங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தொகுக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் ஜிம்பாப்வே மிகவும் பரிதாபகரமான நாடாக உருவெடுத்துள்ளது.
அதைத் தொடர்ந்து வெனிசுலா, சிரியா, லெபனான், சூடான் ஆகிய நாடுகளும் பரிதாபகரமான நிலைமையை எதிர்கொண்டுள்ளன.