புதுமைகள் நிறைந்த புதுச்சேரி


புதுமைகள் நிறைந்த புதுச்சேரி
x

பாண்டிச்சேரி என இன்னொரு பெயரிலும் அழைக்கப்படும் புதுச்சேரி, சட்டசபை செயல்படும் ஒரு இந்திய யூனியன் பிரதேசம்.


அரபிக்கடலிலும், வங்காள விரிகுடாவிலும் எல்லைகளைக் கொண்டுள்ளது புதுச்சேரி.

புதுச்சேரியும், காரைக்காலும் தமிழக வங்கக் கரையிலும், மாஹி அரபிக்கடலிலும், ஏனாம் வங்கக் கரையில் ஆந்திராவையொட்டியும் அமைந்துள்ளது.

ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியரை அடுத்து இன்னொரு ஐரோப்பியர்களான பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் ஆதிக்கம் நடத்திய இடங்களுள் முக்கியமானது புதுச்சேரி. எனவே, பிரெஞ்சுக் கலாசாரத்தின் தாக்கத்தை இன்றும் இப்பகுதியில் பார்க்கலாம்.

சாலைகள் (பிரெஞ்சுக்காரர்களின் வடிவமைப்பு) பெரும்பாலும் நேர்கோட்டில் செல்வது புதுச்சேரியின் சிறப்புகளுள் ஒன்று.

ரோமானியர்களின் பண்டைய வர்த்தக மையமான அரிக்கமேடு, இந்த மாநிலத்தில்தான் இருக்கிறது.

மூன்றில் இருபங்கு வெளிநாட்டினர் வசிக்கும் ஒரு இந்திய நகரமாக புதுச்சேரியின் ஆரோவில்லைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆரோவில் நகரம் உருவாக்கப்பட்டபோது 124 நாடுகளிலிருந்து மண் எடுத்து வந்து கட்டப்பட்டுள்ள ஒரு நினைவுச் சின்னம் இன்றும் உலக ஒற்றுமையை வலியுறுத்தியபடி கம்பீரமாய் காட்சியளிக்கிறது.


Next Story