கோடை வெயிலில் இருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள்


கோடை வெயிலில் இருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள்
x

இயற்கையின் தாக்கத்தில் இருந்து நம்மை நாமே தற்காத்து கொள்வது சாலச்சிறந்தது. காலையில் மோர், இளநீர் போன்றவையும், மதியம் தயிரும், மாலை வேளைகளில் தர்பூசணி பழச்சாறு, நுங்கு ஜூஸ் போன்றவற்றை அருந்துங்கள்.

இயற்கையின் நியதி அன்றும், இன்றும், என்றும் ஒன்றுதான். அதன் போக்கில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால் அதை மாற்ற முயற்சிப்பது தனிமனித பேராசை தான். ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் அபாய மணி அடிக்கும் நிலை யில், அதற்கான காரணத்தையும் தெள்ளத்தெளிவாக தெரிவித்து விட்டனர். ஆனால் அதை எந்தநாடும் காதில் வாங்கிக் கொள்வதாக தெரியவில்லை. எனவே இயற்கையின் தாக்கத்தில் இருந்து நம்மை நாமே தற்காத்து கொள்வது சாலச்சிறந்தது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளது.

ஆரம்பமே அனல் பறக்கிறது. தொடக்கமே சுட்டெரிக்கிறது என்றால் போகப்போக .... தமிழ்நாட்டில் பகல் வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலும், இரவு வீட்டுக்குள் இருக்கவே முடியாத அளவிற்கு புழுக்கமும் மக்களை வாட்டுகிறது. அதிலும், அக்னி நட்சத்திரம் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரையில் வெயில் வாட்டி வதைக் கும். அதற்கு முன்னதாக ஜனவரி முதல் மார்ச் வரையில் ஓரள வுக்கு மட்டுமே வெயில் நிலவும். ஆனால் இப்போதே அதிக வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலில் இருந்து தப்பிக்க சர்க்கரை, ஐஸ் போடாமல் அதிக அளவில் பழச்சாறு குடிக்க வேண்டும். நீர்ச்சத்துள்ள பழங்கள், கம்மங்கூழ், ராகிக்கூழ், கரும்புச்சாறு, இளநீர் பருகுவது நன்று. மக்கள் அதிக நேரம் வெயிலில் சுற்று வதை தவிர்ப்பது நல்லது. நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலான காலத்தில் கடும் வெயிலில் வெளியே செல்வ தைத் தவிர்ப்பது சிறப்பு.

நீரின் அளவு குறைவதைத் தவிர்க்க தினமும் 4 முதல் 5 லிட்டர் சுத்தமான குடிநீர் குடிக்க வேண்டும். கம்பில் அதிகநார்ச்சத்து, நீர்ச்சத்து உள்ளதால், கம்பங்கூழ் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். நுங்கு உடலிலுள்ள சூட்டை தணித்து, அம்மை மற்றும் வைரஸ் ஜூரம் ஏற்படுவதை தடுக்கும். நுங்கை தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண் குணமடைவதுடன், நுங்கிலுள்ள தண்ணீரை, வியர்குருவில் தடவினால் வியர்குருவும் குணமடையும். வாரம் ஒரு முறை, சிறிதளவு சீரகத்தை நல்லெண்ணெய்யில் பொறித்து, சூடு தணிந்ததும் அந்த எண்ணெய்யை உச்சந்தலையில் வைத்தும், உடலில் பூசியும் குளிக்கலாம்.

* வெயில் காலம் முடியும் வரை அனைவருமே ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் பிரியாணி, கேழ்வரகு, சாம்பார் சாதம், சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு பதில் நீர் வகையிலான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். காலையில் மோர், இளநீர் போன்றவையும், மதியம் தயிரும், மாலை வேளைகளில் தர்பூசணி பழச்சாறு, நுங்கு ஜூஸ் போன்றவற்றை அருந்துங்கள்.

* வீடுகளில் ப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை அருந்துவதை காட்டிலும் மண் பானையில் நீர் ஊற்றி வைத்து மண்பானை யில் இருந்து கிடைக்கும் குளிர்ந்த நீரை குடியுங்கள்.

* ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகளையும், ஜீன்ஸ் போன்ற வற்றையும் தவிர்த்து பருத்தியில் (காட்டன்) நெய்யப்பட்ட உடைகளை அணியுங்கள். பெண்களும் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம்.

* வெயிலில் வெளியே செல்பவர்கள் முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் கிரீம் தடவிவிட்டு வெளியே செல்லுங்கள். தரமான கூலிங்கிளாஸ் அணிவது நல்லது.

* தினமும் இரண்டு முறை தலை முடியை தூய்மையான நீரில் நன்றாக அலசுங்கள். இரண்டு மூன்று முறை குளிக்கவும். வீட்டு வாசல்களில், ஜன்னல்கள் வெளியே வாழை இலையை தொங்க விடுங்கள்.

* ஏ.சி. அறையில் அதிக நேரம் இருப்பவர்கள் காலை அல்லது மாலை வேளைகளில் வெயில் இல்லாத நேரத்தில் அரை மணிநேரம் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதுபோன்று தற்காப்பு முறைகளை கடைப்பிடித்து இந்த கோடை வெயிலை அனைவரும் சமாளித்து பாதுகாப்பாக வாழ்வதோடு இயற்கையை பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம் என்று உறுதி ஏற்போம்.


Next Story