மதுரை திருமலை நாயக்கர் மகால்


மதுரை  திருமலை நாயக்கர் மகால்
x

மதுரையில் சிறப்பு வாய்ந்த வரலாற்று இடங்கள் கட்டிடங்களில் முக்கியமானது திருமலை நாயக்கர் மகால்.

மதுரை என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சி கோவில்தான். இது தவிர மதுரையில் எத்தனையோ சிறப்பு வாய்ந்த வரலாற்று இடங்கள் கட்டிடங்கள் உள்ளன. அதில் முக்கியமானது திருமலை நாயக்கர் மகால். கி.பி.1636-ம் ஆண்டு திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகால் மதுரையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. இந்த மகாலை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கட்டிட கலைக்கு சான்றாக இந்த மகாலில் உள்ள தூண்களும் வளைவு மாடங்களும் உள்ளன. அந்த காலத்தில் எந்த நவீன கட்டிட பொறியியல் எந்திரங்களும் இல்லாத நிலையில் இவ்வளவு அழகிய கட்டிடம் கட்ட முடியுமா? என்று பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் இந்த மகாலில் எண்ணற்ற திரைப்பட காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு உள்ளன. ஆனால் கட்டிடத்தின் பாதுகாப்பு கருதி கடந்த 2011-ம் ஆண்டு முதல் திருமலை நாயக்கர் மகாலில் திரைப்படங்களை எடுக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேபோல் டிரோன்கள் பறக்கவும் தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளது.


Next Story