குடும்ப விவசாயம்


குடும்ப விவசாயம்
x

உலக உணவுப் பாதுகாப்புக்கு குடும்பமாக விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் அளித்துவரும் முக்கியப் பங்களிப்பு பற்றி சர்வதேச சமூகம் உணர வேண்டும்.

பசிப்பிணியை துரத்த வேண்டும் என்பதுதான் உலக நாடுகளின் லட்சியம். அதை நோக்கி உலகம் நகர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த நகர்வின் முக்கிய திருப்பமாக 1945-ம் ஆண்டு அக்டோபர் 16 அன்று கனடாவில் உள்ள கியூபெக் நகரில் உலக உணவு மற்றும் விவசாயக்கழகம் நிறுவப்பட்டது. ஊட்டச்சத்தற்ற உணவுக்கும், பசிக்கும் எதிராக மனிதச் சமூகம் எடுத்த முக்கிய நடவடிக்கை இது. உலக அளவில் பசியை போக்குவது தொடர்பான விழிப்புணர்வை உலக நாடுகளில் பரவலாக்கவே, அந்த அமைப்பு தொடங்கிய நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

உலக உணவுப் பாதுகாப்புக்கு குடும்பமாக விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் அளித்துவரும் முக்கியப் பங்களிப்பு பற்றி சர்வதேச சமூகம் உணர வேண்டும். வளர்ந்த, வளரும் நாடுகளின் உணவு உற்பத்தியில் குடும்ப விவசாயமே பிரதானப் பங்கை வகிக்கிறது. இது கிராம வளர்ச்சியின் பல பகுதிகளுடன் தொடர்புகொண்டுள்ளது. உலகத்தில் 50 கோடிக்கும் மேற்பட்ட வயல்கள், குடும்பங்களுக்குச் சொந்தமானவை.

இந்தக் குடும்பத்தினரே 56 சதவீத விவசாய உற்பத்திக்குக் காரணமாக இருக்கிறார்கள். உலக விவசாய நிலங்களில் குடும்ப விவசாயிகளே குறிப்பிடத்தக்க அளவு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். குடும்ப விவசாயம் சரிவிகித உணவுக்குப் பங்களிக்கிறது; இயற்கை வளத்தைப் பாதுகாக்கிறது; பாரம்பரிய உணவுப் பொருள்களையும் பாதுகாக்கிறது.


Next Story