ரத்த ஓட்ட வேகத்தை அறிய உதவும் ஸ்கேன் பரிசோதனைகள்


ரத்த ஓட்ட வேகத்தை அறிய உதவும் ஸ்கேன் பரிசோதனைகள்
x
தினத்தந்தி 3 Oct 2023 10:00 PM IST (Updated: 3 Oct 2023 10:00 PM IST)
t-max-icont-min-icon

‘டாப்ளர் ஸ்கேன்' பரிசோதனை என்பது உடலுக்குள் அசைகிற, நகர்கிற திசுக்களைப் படம்பிடித்துக் காண்பிக்கிறது.

'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' பரிசோதனை என்பது உடலுக்குள் அசையாமல் இருக்கிற உறுப்புகளின் தன்மையைப் படம்பிடித்துக் காண்பிக்கிறது. 'டாப்ளர் ஸ்கேன்' பரிசோதனை என்பது உடலுக்குள் அசைகிற, நகர்கிற திசுக்களைப் படம்பிடித்துக் காண்பிக்கிறது. குறிப்பாக, ரத்தக் குழாய்களில் நகர்கின்ற ரத்த செல்களைப் படம்பிடிப்பதன் மூலம் ரத்த ஓட்டத்தை அறியச் செய்கிறது.

அடுத்து, அசையா உறுப்புகளிலிருந்து திரும்பி வரும் ஒலி அலைகளின் சுருதி மாறுவதில்லை. ஆனால் அசையும் உறுப்புகளிலிருந்து திரும்பி வரும் ஒலி அலைகளின் சுருதி மாறும். இந்த மாற்றத்தை வைத்து ரத்த ஓட்டத்தின் தன்மையைக் கணிக்க முடியும். இந்த அடிப்படையில்தான் 'டாப்ளர் ஸ்கேன்' பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ரத்தக் குழாய்க்குள் நகர்ந்துகொண்டிருக்கும் ரத்த செல்களின்மீது இந்த ஒலி அலைகள் பட்டு எதிரொலித்துத் திரும்புகின்றன. திரும்பி வரும் ஒலி அலைகளின் சுருதி, வேகம், அடர்த்தி, திசை போன்ற பல விவரங்களை அலசி ஆராய்ந்து, ரத்த ஓட்டத்தைக் கணித்து, அதை உருவ படமாகவும் வரைபடமாகவும் தயாரித்துத் திரையில் காண்பிக்கிறது கணினி. இந்தப் படங்களை பிலிம் மூலம் பிரிண்ட் செய்துகொள்ளவும் முடியும். டியூப்ளக்ஸ் டாப்ளர் ஸ்கேன் என்பதும் மேலே கூறப்பட்ட வகையைச் சேர்ந்ததுதான். ரத்த ஓட்டத்தின் வேகம் மற்றும் திசையைக் காண்பிக்கிறது.

அலை டாப்ளர் ஸ்கேன் என்பது, இதற்கான கருவியை நோயாளியின் படுக்கைக்கே கொண்டுவந்து பரிசோதிக்க உதவுகிறது. ரத்த ஓட்டப் பாதிப்பை மிக வேகமாகக் கணிக்க இது உதவுகிறது. கலர் டாப்ளர் ஸ்கேன் என்பது, இந்த ஸ்கேன் கருவி ஒலி அலைகளை வண்ணப் படங்களாக மாற்றி காண்பிக்கிறது. இதன் பலனால் தமனி, சிரை என்று ரத்தக் குழாய்களைப் பிரித்துக் காண இயலும். ரத்த ஓட்டத்தின் வேகம் மற்றும் திசையையும் காண முடியும்.


Next Story