ஏர்வேஸ்
நிறைய விமானங்கள் வானத்தில் பறக்கின்றன. அவை எப்படி ஒன்றோடு ஒன்று மோதுவதில்லை...? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தது உண்டா...?, அதற்கான விடையை நாங்கள் கொடுக்கிறோம்.
பூமியிலுள்ள 'ஹைவேஸ்' போலவே, வானத்திலும் ஏர்வேஸ் உண்டு. பூமி பரப்பில் அமைக்கப்பட்டிருக்கும் நெடுஞ்சாலைகளை போலவே, வானத்திலும் சாலைகள் உண்டு. ஆனால் அவை கண்ணுக்குப் புலப்படாத வரைபடமாகக் குறிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு எண்களும், வேகக்கட்டுப்பாடும் கூட உண்டு. சாலையில் உள்ள சிக்னல் விளக்குகளுக்கு மாற்றாக, வானத்தில் பயன்படுவது ரேடார் சிக்னல்கள். இவை விமான நிலையங்களில் உள்ள கண்ட்ரோல் டவர்களில் இருந்து பிறப்பிக்கப்படுகின்றன.
தொடர்ச்சியான செக் பாயிண்ட்டுகளும், பயணப்பாதைகளும் விமானத்திலுள்ள ரிசிவருக்கு சமிக்ஞைகளாக வந்துகொண்டே இருக்கும். சாலையில் வாகன ஓட்டுனர் சிக்னல் பார்த்து ஓட்டுவது போலவே, பைலட்டும் ரேடார் சிக்னல்களை அறிந்து விமானத்தை இயக்குகிறார்.
Related Tags :
Next Story