சி.எஸ்.கே.அணியின் 'இம்பாக்ட்' வீரர் துஷார் தேஷ்பாண்டே


சி.எஸ்.கே.அணியின் இம்பாக்ட் வீரர் துஷார் தேஷ்பாண்டே
x

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்பாக்ட் வீரராக களம் கண்டிருக்கும் துஷார் தேஷ்பாண்டே பற்றிய சுவாரசியமான தகவல்கள்...

துஷார்

1. துஷார் தேஷ்பாண்டே, 1995-ம் ஆண்டு மே மாதம் பிறந்தவர். இவரது சொந்த ஊர், மகாராஷ்டிரா. மும்பை அணிக்காக ரஞ்சி போட்டியில், 2016-2017-ம் ஆண்டுகளில் விளையாடினார்.

2. துஷாரின் தாயார், வந்தனா 2017-ம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு இறந்துபோனார். அன்னையின் இறப்பின்போது, துஷார் சையத் முஷ்டாக் அலி டிராபி விளையாடிக்கொண்டிருந்தார். அந்த ஆட்டத்தில், 19 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த வெற்றியை அன்னைக்கு பரிசளித்தார்.

3. எல்லா வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், ஒரு ரோல் மாடல் பந்துவீச்சாளர்கள் இருப்பர். அந்தவகையில், துஷாரின் ரோல் மாடல், தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின்.

4. இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் துஷார், 2020-ம் ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் அங்கம் வகித்தார். அங்கு, அதிக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றாலும், இன்று சி.எஸ்.கே.அணியின் இம்பாக்ட் வீரராக விளையாடி அசத்துகிறார்.

இம்பாக்ட் வீரர்

விளையாடும்போது எதிர்பாராத விதமாய் காயம்பட்டால், அவருக்கு பதிலாக மற்றொரு மாற்று வீரர் பீல்டிங் பணிக்கு அழைக்கப்படுவார். அவரால், ஆட்டத்தில் இருந்து வெளியேறிய வீரரின் பேட்டிங் அல்லது பவுலிங் பணிகளை செய்யமுடியாது. வெறும் பீல்டிங் பணிகளை மட்டுமே செய்யமுடியும். ஆனால் இம்பாக்ட் வீரர் என்பது, அணியின் கேப்டன் விருப்பத்திற்கு ஏற்ப, ஆட்டத்தின் முதல்பாதியிலோ அல்லது இரண்டாம் பாதியிலோ ஒருவீரருக்கு பதிலாக மற்றொரு வீரரை விளையாட வைக்க முடியும். அவர், பீல்டிங் மட்டுமின்றி எல்லா பணிகளையும் செய்யலாம். இதுவே இம்பாக்ட் வீரர். அந்தவகையில், துஷார் பாண்டே சி.எஸ்.கே.அணி பவுலிங் செய்யும்போது அம்பத்தி ராயுடுவிற்கு மாற்றாக விளையாடினார்.


Next Story