ரஷ்மோர் மலைத் தொடர்


ரஷ்மோர் மலைத் தொடர்
x

அமெரிக்காவில் ரஷ்மோர் என்னும் மலைத்தொடர் உள்ளது. இங்குதான் புகழ்பெற்ற 'கருங்குன்றம்' என்ற சிகரம் உள்ளது. இந்த கருங்குன்றில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளான ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்சன், தியோடர் ரூஸ்வெல்ட், ஆபிரகாம் லிங்கன் ஆகியோரது முகங்களை சிலைகளாக வடித்துள்ளனர், அமெரிக்க சிற்பிகள். ஒவ்வொரு முகமும் 60 அடி உயரம் கொண்டது. ஆபிரகாம் லிங்கனின் கண்ணில் மட்டும் ஆறடி மனிதன் நிற்கலாம்.

இந்தச் சிலைகளை வடிக்க மிகுந்த முயற்சி செய்தவர் டெக்சாஸ் மாநில வரலாற்றுக் கழகத்தின் மேலாளராக இருந்த ஜோனாதன் ராபின்சன். சிலைகளை வடிக்க ஜான் காட்சன் போர்லம் என்ற சிற்பி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வேலைக்காக இரண்டரை லட்சம் டாலர்களை அனுமதித்தது, அமெரிக்க அரசு. போர்லம் இந்தப் பணியைத் தொடங்கிய போது அவருக்கு வயது 60. அந்த வயதிலும் சுமார் 2 ஆயிரம் மீட்டர் உயரமான கருங்குன்றின் மீது ஏறி பணியினைச் செய்தார்.


Next Story