மியாமி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

image courtesy:twitter/@MiamiOpen


ஜோகோவிச் 3-வது சுற்றில் கமிலோ யூகோ காரபெல்லி உடன் மோத உள்ளார்.
மியாமி,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜோகோவிச் (செர்பியா), ரிங்கி ஹிஜிகாடா (ஆஸ்திரேலியா) உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய ஜோகோவிச், 2-வது செட்டை டை- பிரேக்கரில் போராடி கைப்பற்றினார். ஜோகோவிச் இந்த ஆட்டத்தில் 6-0 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர் 3-வது சுற்றில் கமிலோ யூகோ காரபெல்லி உடன் மோத உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire