ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; அலெக்ஸ் டி மினாரை வீழ்த்திய மெத்வதேவ்
![ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; அலெக்ஸ் டி மினாரை வீழ்த்திய மெத்வதேவ் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; அலெக்ஸ் டி மினாரை வீழ்த்திய மெத்வதேவ்](https://media.dailythanthi.com/h-upload/2024/11/12/20817821-14-daniil-medvedev-afp.webp)
image courtesy:AFP / Daniil Medvedev
ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.
துரின்,
உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் - ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டேனியல் மெத்வதேவ் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
Related Tags :
Next Story