பிரிஸ்பேன் டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை சபலென்கா காலிறுதிக்கு தகுதி
சபலென்கா காலிறுதியில் மேரி பவுஸ்கோ உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
பிரிஸ்பேன்,
முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), புதின்சேவா (கஜகஸ்தான்) உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 7-6 மற்றும் 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர் காலிறுதியில் மேரி பவுஸ்கோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
Related Tags :
Next Story