பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: காலிறுதியில் தோல்வி கண்ட ஜோகோவிச்


பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: காலிறுதியில் தோல்வி கண்ட ஜோகோவிச்
x

Image Courtesy: AFP 

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

பிரிஸ்பேன்,

முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜோகோவிச் (செர்பியா) - அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா உடன் மோதினார்.

இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 6-7 (6-8), 3-6 என்ற செட் கணக்கில் ரெய்லி ஓபெல்காவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.


Next Story