ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி
சுமித் நாகல் முதல் சுற்றில் தாமஸ் மச்சாக்குடன் மோதினார்.
மெல்போர்ன்,
டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் நாகல், தாமஸ் மச்சாக்குடன் (செக்குடியரசு) மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தாமஸ் 6-3, 6-1 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய ஒரே வீரர் சுமித் நாகல் மட்டுமே ஆவார். அவரும் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறியுள்ளார்.
Related Tags :
Next Story