அடிலெய்டு டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பெலிக்ஸ் அகர் சாம்பியன்


அடிலெய்டு டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பெலிக்ஸ் அகர் சாம்பியன்
x

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.

அடிலெய்டு,

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. பல முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு பெலிக்ஸ் அகர் (கனடா) மற்றும் செபாஸ்டியன் கோர்டா (அமெரிக்கா) ஆகியோர் முன்னேறினர்.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இருவரும் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதல் செட்டை பெலிக்ஸ் கைப்பற்றிய நிலையில் 2-வது செட்டை கோர்டா கைப்பற்றி பதிலடி கொடுத்தார். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. 3-வது செட்டை பெலிக்ஸ் அகர் கைப்பற்றி வெற்றி பெற்றார். பெலிக்ஸ் அகர் இந்த ஆட்டத்தில் 6-3 ,3-6 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

கடந்த 4-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story