புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி


புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி
x

image courtesy: ProKabaddi twitter

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

ஐதராபாத்,

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் , இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ் தலைவாஸ் 44 - 29 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் புனேரி பால்டன் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் 35 - 25 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story