மலேசிய பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் தோல்வி


மலேசிய பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் தோல்வி
x
தினத்தந்தி 10 Jan 2025 7:43 AM IST (Updated: 10 Jan 2025 7:44 AM IST)
t-max-icont-min-icon

2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரனாய் - சீன வீரர் ஆகியோர் மோதினர்.

கோலாலம்பூர்,

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எஸ்.எச்.பிரனாய் - சீன வீரர் லீ ஷி பெங் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-8, 15-21, 23-21 என்ற செட் கணக்கில் லீ ஷி பெங் வெற்றி பெற்றார். இதனால் பிரனாய் தொடரிலிருந்து வெளியேறினார் .

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-15, 21-15 என்ற நேர்செட்டில் மலேசியாவின் நூர் முகமது-தான் வீ கிங் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது


Next Story