கிங் கோப்பை பேட்மிண்டன்; லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்


கிங் கோப்பை பேட்மிண்டன்; லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

ஹாங்காங்கை சேர்ந்த ஆங்கஸ் இங் கா லாங்கை 10-21, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லக்சயா சென் வெற்றி பெற்றார்.

ஷென்ஜென்,

சீனாவில் கிங் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்தியாவின் முன்னணி வீரரான லக்சயா சென் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

உலக தர வரிசையில் 12-ம் இடம் வகிக்கும் சென், உலக தர வரிசையில் 17-ம் இடம் வகிக்கும் ஹாங்காங்கின் ஆங்கஸ் இங் கா லாங் என்பவரை எதிர்கொண்டார். இந்த போட்டியில், தொடக்கத்தில் முதல் செட்டை பறிகொடுத்தபோதும் அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி சென் வெற்றி பெற்றார். 10-21, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் லாங்கை, சென் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து, நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் சீன வீரரான ஹூ ஜே ஆன் (வயது 18) என்பவரை சென் எதிர்கொள்ள உள்ளார். இதேபோன்று மற்றொரு போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரை சேர்ந்த லோ கியான் யூவ்வை வீழ்த்தி, ஹூ ஜே அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.


Next Story