2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த இந்தியா விண்ணப்பம்

2030-ல் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது.
புதுடெல்லி,
24-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2030-ம் ஆண்டு நடைபெற உள்ளது. 2036-ல் நடைபெற ஒலிம்பிக் தொடரை நடத்தும் வாய்ப்பை பெற இந்தியா முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது.
தொடரை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெறும் பட்சத்தில் அகமதாபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31-ம் தேதி ஆக உள்ள நிலையில் இந்தியா முன் கூட்டியே விண்ணப்பித்து தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இந்தியா ஏற்கனவே 2010-ம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளை புதுடெல்லியில் நடத்தியுள்ளது. அப்போது சில குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், போட்டிகளை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது.
Related Tags :
Next Story