ஆசிய கலப்பு அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : பி.வி.சிந்து விலகல்


ஆசிய கலப்பு அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : பி.வி.சிந்து விலகல்
x

image courtesy: AFP

ஆசிய கலப்பு அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து பி.வி. சிந்து விலகியுள்ளார்.

புதுடெல்லி,

ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சீனாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காயம் காரணமாக விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த தொடரில் இந்திய அணி கடந்த முறை வெண்கல பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story