ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: கஜகஸ்தானை வீழ்த்திய இந்தியா


ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: கஜகஸ்தானை வீழ்த்திய இந்தியா
x

Image Courtesy: @BFI_basketball

இந்திய அணி 88-69 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

சென்னை,

சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக ஆசிய போட்டிக்கு தகுதி பெறும்.

இதில் 'இ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது 4-வது தகுதி சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தானை நேற்று சந்தித்தது. இந்த ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 88-69 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.


Next Story