வினேஷ் போகத் மேல்முறையீடு - இரவு 9 மணிக்கு விசாரணை


வினேஷ் போகத் மேல்முறையீடு - இரவு 9 மணிக்கு விசாரணை
x

தனக்கு வெள்ளி பதக்கம் வேண்டுமென்று வினேஷ் போகத் மேல்முறையீடு செய்திருந்தார்.

பாரீஸ்,

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப் பட்டார். 100 கிராம் உடல் எடை கூடியதாக கூறி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் பதக்க கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் இதயங்களும் நொறுங்கி போயின. தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் கடும் அதிர்ச்சி அடைந்த வினேஷ் போகத், இனி என்னிடம் போராட சக்தியில்லை எனவும் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். வினேஷ் போகத்தின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

முன்னதாக தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். மேலும் தனது தங்கப் பதக்கத்திற்கான போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த அவர், வெள்ளி பதக்கத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த மேல்முறையீடு மீதான விசாரணை இன்றிரவு 9 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் அவரது சார்பில் 4 வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர்.


Next Story