ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா வெற்றி


ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா வெற்றி
x
தினத்தந்தி 31 July 2024 3:59 PM IST (Updated: 31 July 2024 4:12 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீஜா அகுலா 2-வது சுற்றில் வென்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் (2 வெண்கலம்) வென்று அசத்தியுள்ளது.

இந்த சூழலில் 6-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா வெற்றி பெற்றுள்ளார். ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா, சிங்கப்பூரின் ஷெங் ஜியானை 4-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

ஸ்ரீஜா அகுலா 2-வது சுற்றில் வென்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

முன்னதாக இன்று நடந்த பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து இரண்டாவது சுற்றில் வென்றார். அதேபோல், பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் இரண்டாவது சுற்றில் வென்றார். இதேபோல் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று) போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.


Next Story