பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை: அரையிறுதியில் இந்திய இணை தோல்வி


பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை: அரையிறுதியில் இந்திய இணை தோல்வி
x
தினத்தந்தி 2 Aug 2024 1:57 PM GMT (Updated: 2 Aug 2024 2:11 PM GMT)

இந்திய இணை அடுத்து வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் வில்வித்தை கலப்பு அணிகள் அரையிறுதி போட்டியில் இந்திய இணையான தீரஜ் பொம்மதேவரா- அங்கிதா பகத் ஜோடி, தென் கொரியாவின் ஷியோன் லிம் - வூஜின் கிம் இணையுடன் மோதியது. இதில் ஆதிக்கம் செலுத்திய தென் கொரிய இணை 6-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அரையிறுதியில் தோல்வியடைந்த தீரஜ் பொம்மதேவரா- அங்கிதா பகத் ஜோடி அடுத்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளது.


Next Story