சுல்தான் கோப்பை ஆக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா


சுல்தான் கோப்பை ஆக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா
x

image courtesy: Hockey India twitter

சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஆக்கி தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

ஜோஹர்,

12-வது சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஆக்கி (21 வயதுக்கு உட்பட்டோர்) தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் இந்திய அணி உள்ளூர் அணியான மலேசியாவுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் ஷர்தா நந்த் திவாரி (11-வது நிமிடம்), அர்ஷ்தீப் சிங் (13-வது நிமிடம்), தலேம் பிரியோபர்தா (39-வது நிமிடம்), ரோஹித் (40-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். மலேசியா அணியில் முகமது டேனிஷ் ஐமன் (8-வது நிமிடம்), ஹாரிஸ் (9-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்திய அணி அடுத்த லீக்கில் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதுகிறது.


Next Story