இந்தியா வருகை தரும் உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி


இந்தியா வருகை தரும் உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி
x

மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி, இந்தியா வருகிறது.

புதுடெல்லி ,

2022-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி, வருகிற அக்டோபர் மாதம் இந்தியா வருகிறது.

இந்தியாவில் கால்பந்தை பிரபலப்படுத்தும் முயற்சியின் ஒரு அங்கமாக வரும் அர்ஜென்டினா அணி, கேரளாவில் நடைபெறும் கண்காட்சி போட்டியில் விளையாடுகிறது. மெஸ்சி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இதில் ஆடுகிறார்கள்.

2011-ம் ஆண்டுக்கு பிறகு அர்ஜென்டினா அணி இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.


Next Story