சூப்பர் கோப்பை கால்பந்து: பார்சிலோனா அணி சாம்பியன்


சூப்பர் கோப்பை கால்பந்து: பார்சிலோனா அணி சாம்பியன்
x

image courtesy: twitter/@FCBarcelona

இந்த தொடரில் பார்சிலோனா கோப்பையை வெல்வது இது 15-வது முறையாகும்.

ஜெட்டா,

சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அடுத்தடுத்து கோல்கள் அடித்து அசத்தியது. ரியல் மாட்ரிட் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்ற போதிலும் அந்த அணியால் அடுத்தடுத்து கோல்கள் அடிக்க முடியவில்லை.

முடிவில் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பார்சிலோனா கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் பார்சிலோனா கோப்பையை வெல்வது இது 15-வது முறையாகும்.

பார்சிலோனா தரப்பில் ராபின்ஹா 2 கோல்களும், லாமினே யாமல், ராபர்ட் லெவான்டாவ்ஸ்கி மற்றும் அலெஜான்ட்ரோ பால்ட் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து அணி வெற உதவினர். ரியல் மாட்ரிட் அணியில் எம்பாப்வே மற்றும் ரோட்ரிகோ மட்டுமே தலா ஒரு கோல் அடித்தனர்.


Next Story