ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எப்.சி. வெற்றி
மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. - ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.
மும்பை,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. - ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் முகமது சனான், ஜோர்டான் முர்ரே, ஜாவி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மும்பை சிட்டி அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 3-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story