ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
x

image courtesy: Bengaluru FC twitter

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

சென்னை,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை ஐதராபாத்தில் நடந்த ஈஸ்ட் பெங்கால் - ஐதராபாத் எப்.சி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

தொடர்ந்து நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, பெங்களூரு எப்.சி. அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 2-4 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி.யிடம் தோல்வியை தழுவியது.

முதல் பாதியில் 2-2 என்று சமநிலை நீடித்த நிலையில் பிற்பாதியில் பெங்களூரு மேலும் 2 கோல் அடித்து வெற்றிக்கனியை பறித்தது. 14-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 7-வது தோல்வியாகும்.


Next Story