மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு 327 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் எடுத்தது.
இந்தூர்,
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க பேட்ஸ்மேன்கள் அணிக்கு சிறந்த தொடக்கத்தை அளித்தனர். 6-ம் வரிசையில் களமிறங்கிய ஆஷ்லீ கார்ட்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். அவர் 83 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜெஸ் கெர், லியா தகுகு ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது.






