பெண்கள் டி20 உலகக் கோப்பை: இந்திய வீராங்கனைக்கு ஐ.சி.சி. கண்டனம்


பெண்கள் டி20 உலகக் கோப்பை:  இந்திய வீராங்கனைக்கு  ஐ.சி.சி. கண்டனம்
x
தினத்தந்தி 8 Oct 2024 3:12 AM GMT (Updated: 8 Oct 2024 3:15 AM GMT)

இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

துபாய்,

9-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜா, துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இதில் 3 விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி ஆட்டநாயகி விருதை பெற்றார்.

முன்னதாக அவர், பாகிஸ்தான் வீராங்கனை நிதா தரை போல்டாக்கியதும், ஆக்ரோஷமாக வெளியே போ என்பது போல் சைகை காட்டினார். இது வீராங்கனைகளின் நடத்தை விதியை மீறிய செயல் என்று கண்டித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியை விதித்துள்ளது.

அடுத்த 2 ஆண்டுக்குள் அவரின் தகுதி இழப்பு எண்ணிக்கை 4-ஐ எட்டினால் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story