பெண்கள் டி20 உலகக் கோப்பை; வெஸ்ட் இண்டீஸ்-க்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து


பெண்கள் டி20 உலகக் கோப்பை; வெஸ்ட் இண்டீஸ்-க்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
x

Image Courtesy: @ICC

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-பிரண்ட் 57 ரன்கள் எடுத்தார்.

துபாய்,

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக மியா பவுச்சியர் மற்றும் டேனியல் வியாட்-ஹாட்ஜ் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் மியா பவுச்சியர் 14 ரன்னிலும், டேனியல் வியாட்-ஹாட்ஜ் 16 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய ஆலிஸ் கேப்ஸி 1 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் ஹீதர் நைட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் நாட் ஸ்கிவர்-பிரண்ட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார்.

மறுபுறம் ஹீதர் நைட் 21 ரன்னிலும், எமி ஜோன்ஸ் 7 ரன்னிலும், சார்லோட் டீன் 5 ரன்னிலும், டேனியல் கிப்சன் 7 ரன்னிலும், சோபி எக்லெஸ்டோன் 7 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய நாட் ஸ்கிவர்-பிரண்ட் அரைசதம் அடித்தார்.

இறுதியில் இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-பிரண்ட் 57 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிளெட்சர் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 142 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஆடி வருகிறது.


Next Story