மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிராக அயர்லாந்து பேட்டிங் தேர்வு


மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிராக அயர்லாந்து பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 10 Jan 2025 11:53 AM IST (Updated: 10 Jan 2025 11:53 AM IST)
t-max-icont-min-icon

டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் கேபி லெவிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்

ராஜ்கோட்,

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த போட்டிகள் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடக்கிறது. இவ்விரு அணிகள் இடையேயான முதல் போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் கேபி லெவிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.


Next Story